பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xvili அத்தேர்வுக்குரிய சான்றிதழ்களைத் தயார் செய் என்றார். நினைத்துப் பார்க்கின் அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லையென்பேன். - பணம் கட்டும்போது சிறு சிக்கல் ஏற்பட்டது. என் தந்தை நகரமன்றத் தலைவர் முன் கையொப்பமிட்டுச் சான்றிதழ் பெற்றுத்தர வேண்டும். ஆனால் தந்தையிடம் எப்படிக் கூறுவது என்று தயங்கிக் கொண்டிருந்தேன். இந் நிலையில் அதற்கும் அவரே வழி செய்தார். என்னைப் பாதுகாப்பவர் என்ற முறையில் கையொப்பமிட்டுச் சான்றிதழ் வாங்கித் தந்தார். நினைத்துப் பார்க்கின் அப் பெருந்தகையின் பேரன்பிற்கு எனதிருகைத்துப்பின்றி அவருக்கு நான் எதை ஈடுசெய்ய முடியும் தேர்வுக்குப் பணம் கட்டி முடித்தேன். அடுத்து.தமிழறிவை வளப் படுத்திக் கொள்ளும் வாய்ப்பெண்ணி நடந்தேன். பாவேந்தர் மாணவர்கட்கு இலவசமாக இரவில் தன் வீட்டில் தமிழ் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். நானும் அதில் பங்குகொண்டு முறையாகத் தமிழ் பயின்று வந்தேன். பாவேந்தர் கற்பிக்கும் முறையே தனிச் சிறப்புடைய தாகும். நினைத்துப் பார்க்கின் அவர் கற்பித்த முறையும் கருத்தளித்த முறையும் என்னைத் தமிழில் ஈடுபடுத்திக் கொள்ளும் திருப்பு முனையாக அமைந்தது என்று இன்றும் பெருமைப்படுகிறேன். முறையே இலக்கண இலக்கியங்களை அவரிடம் நன்கு பயின்றதன் காரணமாக 1934 ஆம் ஆண்டு எழுதிய 8.1 தேர்வில் வெற்றி பெற்றேன். இதற்காகப் பெரிதும் மகிழ் வடைந்தவர்கள் இருவர். ஒருவர் திருமுடி நடராச செட்டியார். மற்றொருவர் எனதாசான் கவியரசர் பாரதிதாசன். இவர்களை என்றும் என்னால் மறக்க முடியாது. நான் மீண்டும் பிரெஞ்சுப் பட்டதாரியாவதற்கு அக்கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கேனோ தமிழில் ஏற்பட்ட ஈடுபாடு பிரெஞ்சு மொழி யில் ஏற்படவில்லை.