பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii கள் பலரிடமிருந்து கிடைத்துக் கொண்டிருந்தன. நினைத் துப் பார்க்கின் அன்றைய மனப்போக்கு வேறு. இன்றைய மனப்போக்கு வேறு. அன்று கவிஞனைப் பாராட்டினார்கள் பரிசளித்தார்கள். இன்றோ கவிதை எழுதக் கேட்டு மலரிை அழகுபடுத்தி விற்கின்றனர். கவிஞனைக் கடைக்கண்ணால் கூடப் பார்ப்பது கிடையாது. நான் புதுவைக்கு அண்மையில் பணிபுரிந்த காரணத் தால் கவியரசரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற். பட்டது. சீர்திருத்த எண்ணங்கள் அவர் தொடர்பால் ஏற் பட்டுத் தழைத்தன. அவர் நடத்தி வைக்கின்ற தமிழ்த் திரு மனங்கட்கெல்லாம் நானும் அழைத்துச் செல்லப்படுவேன். திருமணமானவன் என்ற காரணத்தால் நானும் மணமக் களைப் பாராட்டி வாழ்த்துவேன். ஆன்ற தமிழிலக்கிய மேற்கோள் காட்டி மண மக்களை வாழ்த்துவேன். என் தமிழறிவைக் கேட்டுப் பாவேந்தர் பூரித்துப் போவார். திருமண விருந்தில் அவர் பக்கத்திலே உட்கார்ந்து, கொள்ளச் சொல்வார், என்மீது அவருக்கு அவ்வளவு பரிவு: உண்டு. அவர் நடத்திய திருமணங்களில் நான் கலந்து கொள்ளாததே கிடையாது. அடிக்கடி அவர் வீட்டுக்குச் செல்வேன். நான் எழுதும் பாடல்களைக் காட்டுவேன். சில திருத்தங்கள் செய்து தருவார். அவர் திருத்திய படி களை இன்றும் நான் உயிரினும் மேலாகப் போற்றி வரு. கிறேன். - பாவேந்தர் ஒருமுறை "உனக்கு எளிய முறையில் எழுத வருகிறது. ஆனால் நடை படியவில்லை. என் கவிதை களைப் படித்து வா’ என்று கூறினார். அன்று அவர் கூறியது. இன்றும் எவ்வளவோ பயனுடையதாகவே தெரிகிறது. மறைந்த பாவேந்தர் என்னிடம் நேரில் சொல்லாமல் மற்றவரிடம் என்னைப் பலப்பல பாராட்டி எனக்கு ஆர்வ மூட்டி வந்தார். - ஒன்றரை ஆண்டுக்குப்பின் அதாவது 1944 ஆம் ஆண்டு. காரைக்காலுக்கு மாற்றப்பட்டேன். என்னோடு ஆசிரியர்