பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

хxix ஆம் ஆண்டு வெளியிட்டனர். நூலுக்கு நல்ல பாராட்டு தல்கள் கிடைத்ததால் 1950 ஆம் ஆண்டு கொடிமுல்லை என்ற நூலையும் வெளியிட்டனர். அவர்கள் என் நூல் களைத் தொடர்ந்து வெளியிடுவதாக இருந்தனர். பொன்னி "ஏடு புதுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு மாற்றப் பட்டுச் சீரழிவுற்றது. மாப்பாசானின் சிறுகதையொன்றைப் பெரிய இடத்துச் செய்தி' என்ற பெயரில் பிரெஞ்சு மொழியி லிருந்து தமிழில் மொழிபெயர்ப்புச் செய்திருந்தேன். அதை 1951 ஆம் ஆண்டு சென்னை செல்வ நிலையத்தார் நண்பர் அறிவழகன் துாண்டுதலால் வெளியிட்டுதவினர். அடுத்து என்னால் எழுதப்பட்ட இசைப்பாட்டு நூல் தொடுவானம்’’. அதை வேலூர் திராவிடன் பதிப்பக உரிமையாளர் கிருஷ்ணன் வெளியிட்டுதவினார். தொடர்ந்து என் நூல்களையெல்லாம் வெளியிட இருந் தார். நினைத்துப் பார்க்கின் வறுமை அவர்களையும் தொடர்ந்து விட்டது போலும். முன் கூறிய செந்தமிழ்ப் பதிப்பகம், செல்வம் பதிப்பகம், திராவிடன் பதிப்பகம் ஆகிய மூன்றும் சீரழிந்தன. பாவேந்தர் பாரதிதாசன் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருந்த முல்லைப் பதிப்பகத்தின் பங்குதாரர் செல்லப்பச் செட்டியார் தனது உறவுத் தம்பி ந. பழனியப்பனோடு கூட்டுச் சேர்ந்து பாரி நிலையம் நடத்திக் கொண்டிருந்தார். சென்னை செல்லும் போதெல் லாம் பாரி நிலையத்தில் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டதால் பங்குதாரர் ந. பழனியப்பனோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. பாரி நிலையத்திலிருந்து பங்குதாரர் ந. பழனியப்பன் பிரிந்து தன் சகலையோடு கூட்டுச் சேர்ந்து மலர் நிலையம் என்ற பதிப்பகத்தை நடத்திக் கொண்டிருந்தார். அவர் 1954 ஆம் ஆண்டு என்னால் எழுதப்பட்ட 'எழிலோவியம்' என்ற நூலை மலர் நிலையம் வாயிலாக வெளியிட்டார்.