பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxi களில் வெளிவந்தன. தொடக்கத்திலிருந்தே பாரியின் புகழ் போல் பாரி நிலையம் சீரும் சிறப்பும் பெற்று வருகிறது. நினைத்துப் பார்க்கின் நான் சந்தித்த வெளியூட்டுரிமை யாளர்களுள் பண்பும், நேர்மையும் எளிமையும் நனிமிகுந்த sufř Lufrif செல்லப்பச். செட்டியார் அவர்கள் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப் படுகின்றேன். நான் பல்வேறு கவியரங்குகளில் பங்கு கொண்டுள் ளேன். முப்பது கவியரங்குகளில் பாடிய பாடல்களின் தொகுப்பே "பாட்டரங்கப் பாடல்கள்'என்னும் நூலாகும், நினைத்துப் பார்க்கின் என்னைப் பெரிதும் ஊக்கியதும் பலர் பாராட்டைப் பெற்றதுமான பல கவியரங்கப் பாடல் கள் இன்றும் என் மனதில் மகிழ்ச்சியை ஊட்டிக்கொண்டே யிருக்கின்றன. உட்கிடக்கையும் உணர்வும் 14-1-1952 இல் திருச்சி வானொலி நிலையத்தார் 'பொங்கல் விழா' கவியரங்கிற்கு என்னை அழைத்திருந் தார்கள். கவியரங்கிற்கு மறைந்த சர். ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்கள் தலைமை தாங்கினார்கள். வாழ்க இளம் பரிதி' என்ற தலைப்பில் நான்பாடினேன். ஆசை மனையாட்டி அன்பே இதைக்கேள்நீ! - மூசையிலே வைத்தெடுத்த பொன்னே முளித்தகதிர் நீர்நிலங்கள் விண்ணை நிலைத்த பொருளையெலாம் ஆட்டிப் படைப்பதுவும் ஆக்கம் விளைப்பதுவும் வானம் முளைத்து வரும்பரிதிச் செய்கையடி இல்லம் புதுக்கி எழில் புதுக்கி நீராடி அல்லொத்த கூந்தல் அழகைப் பெருக்க கறுகெய் தடவுக கன்றாக வாரிமுடி - புத்தாடை பூண்ரீ மலர்த்துடு கம்வீட்டுச் சொத்தாம் குழந்தைகளைத் துய்மைப் படுத்துகவே!