பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvi ..............."இந்த காட்டில் பழக்கத்தால் உயர்வு தாழ்வு படைப்பினால் அல்ல தம்பி’ விளைவினை மக்கள் எல்லாம் பொதுவாகத் துய்க்கும் மேன்மை முளைத்திடில் தமிழர் காட்டில் முளைத்திடும் இன்ப வாழ்வு' இதுபோன்ற கருத்துகளும் இயற்கையின் படப்பிடிப் பும் என் பாடல்களில் ஆங்காங்கே நிறைந்திருப்பதைக் காணலாம். நான் பொருளுக்கோ புகழுக்கோ விரும்பிக் கவிதைகள் எழுதியதில்லை. அப்படியென்றால் நான் செல்வந்தன் என்பது பொருளல்ல. உணர்வு மேலிடும் போது என்னால் கவிதை எழுத முடிகிறது. தூண்டுதலால் என் விருப்பத்திற்கு மாறாகக் கவிதைகள் எழுத நேர்ந் தால் விறுவிறுப்பாகவும் ஒட்டமாகவும் கவிதைகள் அமைவ தில்லை. அது என் இயற்கைப் பண்பு. உணர்வும் உறவும் வயல் வெளியைச் சுற்றுவதும் குழந்தைகளுடன் விளை யாடுவதும் கவிதை இயற்றுவதும் படிப்பதும் எனக்கு இன்பம் ஊட்டுவன. எனது கவிதைகளில் பெரும் பாலானவை நள்ளிரவில் பிறந்தவையே. எனக்கு விருப்ப மானவை தனித்தமிழும் கவிதையும். நான் விரும்பாதவை மரக்கறி உணவும் பொய்பேசுவதும். . . . - - - நான் என் அய்ம்பத்தெட்டாமாண்டைக் கடந்து அய்ம்பத்தொன்பதாம் ஆண்டில் நடையிட்டுக் கொண் டிருக்கின்றேன். எனக்கு மாதரி, அய்யை, எழிலி, முல்லை. இளவெயினி என்கின்ற அய்ந்து பெண் மக்களும் நக்கீரன் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி பெருங்கிள்ளி என்கின்ற நான் ஆண்மக்களும் உள்ளனர். பெண்பிள்ளைகளில் முன்