பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்கை வளமிகு வாழ்வுக்கு.இலக்கியம் சமைப்போம்! வான்வழங்கும் செம்பரிதி தைவருதல் கண்டோம்! வளம்மிகுந்த தைக்கண்டோம் வானொலியில் இன்று தேன்வழங்கும் கவிபரங்கத் தலைமையினை ஏற்கும் செந்தமிழர் தொகைப்பாட்டே இலக்குவனார் ஐயா! ஆன்வழங்கும் வளத்தோடு வயல்வழங்கும் நெல்லும் அணியணியாய்ப் பெற்றுள்ள காவிரிசூழ் நாட்டீர்! கான்வழங்கும் வண்டிசைபோல் கவிபாடு வோரே! கைகூப்பி வாணிதாசன் வணங்குகின்றேன் ஏற்பீர் இல்லறத்தை கல்லறமாய்ச் செய்திடுதல் வாழ்க்கை! இட்டுண்டு பசிபோக்க இயங்கிடுதல் வாழ்க்கை நல்லறத்தைப் பெருக்கிடவே உழைத்திடுதல் வாழ்க்கை! நாட்டினிலே முதலாளி தொழிலாளி என்ற - கொல்லறத்தைப் பொடியாக்கி வளமைமிகு வாழ்வின் குறிக்கோளே மக்களினக் குறிக்கோளாய் எண்ணும் வல்லறமே இன்றுள்ள மக்களின வாழ்க்கை: . வளர்த்திடுவோம் புதுநோக்கில் இலக்கியத்தை நாமே!. மக்களிடை நிலவுகின்ற செயல் நன்மை தீமை மறிகடல்மேல் எழுதிங்கள் நீளருவி மேற்குச் செக்கரிடை மலைச்சாரல், திரிகின்ற வேங்கை தீந்தமிழை இசைக்கின்ற குயிலினங்கள் நீண்ட 2