பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்சு புகழில் விளங்கக் காண்பாரே! இவரியா ரென்குவையாயின், இவரே தொண்டை கன்னாட்டின் துறைதொறும் கலங்கள் ஆடி அசைந்து பாடிடு கடல்மேல் அணியணி யாக அண்டிடு படகில் . வந்து குவியும் மணிபொன் செந்நெல் 5 முத்து தந்தம் முதிர்மலைத் தேக்கு கிறைத்துப் பொருளை கிறைத்துப் புகழைத் தமிழக மிருந்தே தடங்கடல் தாண்டி உலகுக் களித்த ஒப்பிலாப் பல்லவர் - ஆண்ட காஞ்சி அளித்த அண்ணா! -: , , , 10 தென்னகம் ஆண்ட முன்னாள் முதல்வர்! உலகம் வியக்கும் ஒப்பிலா அறிஞர்! பிறர்வாய் அடக்கும் பேச்சிற் பெரும்புலி! வள்ளுவர் குறளின் உள்ளுறை உவமம்! சங்க இலக்கியத் தீந்தமிழ்ச் சாறு! - 15 குறுந்தொகை மெய்ப்பொருள் கூட்டும் தென்றல்! தம்பியர் கண்ட தானைத் தலைவர்! வரியைக் குறைத்து வறுமை குறைத்து நெறியோ டாண்ட நீள் புகழ் மன்னர்! வளர்த்த சங்கத் தமிழின் மாண்பை - 20 உலகத் தமிழர்க் குணர்த்திய செம்மல்! - இனியர் எளியர் எவர்க்கும் என்றும் பணிவுடன் இன்சொல் பகரும் மேதை! வான்தொடு மலையும் மலையின் சாரல் மானை வீழ்த்த வாங்கிய சிலையின் 25 கால்வழிச் செந்தேன் பாயப் பழுக்கும் - கனிமரத் தோப்பும் கதிர்முனை சாய்ந்த செந்நெல் வயலும் செழுமலர்க் காடும் புன்னை மணக்கும் நெய்தற் பொருளும் தன்னகம் கொண்ட தமிழக அரசை - 30