பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-3.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 ஒடிப் பொருள்குவிக்கும் ஊர்தியெலாம் ஆட்சிக்குத் தேடிப் பொருள்குவிக்கச் செய்தவன்யார்?-வாடி வதங்கிய மக்கள் வயிறு நிறைய உதவும் கலைஞரென ஒது! - 2 : புன்செய்ப் புலத்தின் இறையிலி செய்தோன்; என் நெஞ்சில் கிலைத்த மறவனாம்!-கொஞ்சு தமிழ்கூறு நம் அண்ணாச் சான்றோனின் தம்பி அமிழ்தின் இனியவ னாம்! 22 மண் ணாள் முதலமைச்சன் வாய்திறந்தால் போதுமென எண்ணிக் கிடப்போரை எண்ணுவதோ?--கண்ணின் மணியாம் கருணா நிதி என்போன் காக்கும் அணியாவான் காட்டிற் கவன்! 23 நொதுமல் பகையென்று நோக்காது நாட்டில் பொதுமை முறைசெய்யும் பொற்பன்-இதுநாள் அரசாள் முதலமைச்சன்! ஆன்ற கலைஞன்! உரைசாலப் பெற்றான் உணர்! 24 பாடிப் பிழைக்கும் பறவையாம் பாவலர்க்குக் கூடிப் பிழைக்கக் கொடுப்போனாம்?-ஈடில் கலைஞன் கருணா கிதியே அமைச்சன்! - - பலபெற்று வாழ்க படர்ந்து 2.5 கல்லார்க்கும் கற்றோர்க்கும் காயும் கதிர்போல எல்லார்க்கும் ஈயும் இயல்புடையோன்!-வல்ல எனக்கேனோ என்னும் இயல்புடையார் வாழ்க்கை மனக்கவலை மாற்றும் மருந்து! - 26 வெள்ளத்தால் பாழ்பட்ட வேற்று கிலத்தார்க்கும் வள்ளல்போல் வாரி வழங்குவோன்!-வெள்ளம் குறையாக் குளிர்பொன்னி ஆற்றோன் கலைஞன் நறைபோல் இனியனாம் நாடு! 27 4 -