பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறிகொடுத்தால் பார்த்தவர்கள் ஏனிங்கு சிரிக்கமாட்டார்? பகைவர்கள் ஏன் நன்கு பேசமாட்டார்? போர்வீரர் தலைகுனிந்து பேருண்மை உருவான பொன்னடே! எம்முயிரே! ஊர்கெட்ட நாற்றத்தால் உளம்கெட்டுப் புண்ணன, வேதனையால் பேசுகிருேம், உணர்ச்சிகளைக் கொட்டுகிருேம், உண்மையிலே இந்நாளும் அந்நாளாய் ஆயிடுமோ? என்றதொரு பலவீனம் எம்மையெலாம் சூழ்கிறது, இன்றிங்கே பேரச்சம், அன்றங்கே அடிமையிருள்! இன்றெம்மைக் கொல்லுவது உடன்பிறந்த பெருவியாதி அன்றெம்மை அழித்ததுவோ, அந்நியரின் தடி ஆட்சி! 30