பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊமைக்கன்னி! வெண்பனிப் போர்வைமுடி வேண்டியமட்டும் தூங்கும் தண் பயிர் வயல்களெல்லாம் தகவுடை மாந்தர் காங் கண்விழித்தெழுவதேபோல் களித்தன கனிந்த ஞானம் பண் மிகு சீதத் தென்றல் முன்வர வந்தாள் கன்னி! என்னெடு பேசமாட்டாள் இளமயில் கோலக்கன்னி மன்னுயிர் யாவுமின்ப மானவள் வரவு காணக் கண்ணுெளி பெற்றுத்துாய கவியெனக்காணும் கன்னி விண்ணிலே தோன்றிலுைம் வேண்டிய உறவுக்காரி அழகெலாம் அவள் படைப்பு அசைகிருள் அழகுக் கன்னி! பொழிலெலாம் ஒளிபெருக்கும் பூரணி பண்பின் பழச்சுவை சேர இன்பப் புதுக்கதிர் வீசி நம்மை எழச் செயும் காலைக்கன்னி என்றுமே ஊமைக்கன்னி 36