பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுச் சுடரை ஏந்துகின்ற புனித மண்ணில் புதுவுலகில் புரட்சியெனும் சிறு பிழம்பை பேரொளியாய்ப் பரசக்தி தூண்டிவிட்டாள்-(அப்) பெருங்கனலே பாரதியாய்ப் பிறந்ததம்மா! சூரியனைக் காணுத சூனியம் போல். சுதந்திரத்தைக் காணுத சோகை நெஞ்சில் வீரமெனும் புது ஒளியை வெறியின் சூட்டை உரம் பொங்கப் பாய்ச்சிவிட்ட ஒளியின் வெள்ளம்! ஒராயிரம் ஆண்டு உணர்ச்சியின்றி, ஒடுக்கிவிட்ட அடிமையெனும் சவச்சாத்தானே சூறையிட்டு ஜெயகாளி பலிபீடத்தில் - வெட்டிவிட்டான் வீர ஒளிக் கவிதை வாளால்! 42