பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தரைனேழுத்ஆற எட்டுத் திக்கும் எமது உயிர் முரசொலியைக் கேட்க வேண்டும் சத்தியம் எங்கிலும் தழைக்க வேண்டும் சாந்தியும் இன்பமும் சேர வேண்டும் அத்தகைய வித்தைமிகு தமிழ் வேதத்தின் வித்தான சக்தியவன் ஞானச் சித்தன்! இந்த புது நூற்ருண்டின் இதய வேந்தன் சந்தமிகு பாரதியின் செந்தேன் சாரம் தித்திக்கும் கவிதைகளைக் குயில்கள் பாடும் தத்திவரும் கிளிக்கூட்டம் தமிழ்தான் பேசும் சித்திரமாம் செந்தமிழை குழந்தை காணும்; யுத்தஜெய பேரிகையை வீரர் கேட்பார்! வெத்துமர விறகைப்போல் எரிந்த எம்மை வித்தை மிகு வீணைகளாய் மீட்டிவிட்டான் பாஞ்சாலி சபதத்தைக் கேட்டு விட்டால் பேடிமகன் கூட பலபீமனுவான்! 45