பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர வணக்கம் வாணிபம் செய்யவந்தான் வஞ்சவாள் திட்டிவிட்டான், வீரத்தை விலைக்கு வாங்கும் வியாபாரம் செய்யலாளுன். நாணின்றி சிலர் அலைந்தார் நம்முடன் பிறந்த நோய்போல் நச்செனும் பேடி மாக்கள் நாட்டினைக் காட்டித் தந்தார். ஆணுெடு பெண்கள் மக்கள் ஆன்றநற் கிழவர் எல்லாம் ஆடிய தோள் புடைத்தார் அடல் பெரும் படைஎடுத்தார், மானத்தைக் காப்போம் இன்றேல் மரணத்தில் வாழ்வோம் என்ருர்! மண்டலம் அதிர்ந்ததெங்கும் முழங்கிற்று சங்கநாதம். 55