பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்பது இல்லை என்ருன் திகைத்தது தியராட்சி, திசையெலாம் அதிசயிக்கத் திறமிகு வெற்றி தந்தான்! போர்ப்படை, பாவம், சூது பொய், கொலை மலிந்த மண்ணில் புண்ணியன் புத்தனே போல் போதமாம் பண்ணைவைத்தான். பார்புகழ்ச் சித்தனைன் புவிஎலாம் நமது நாட்டின் புதுப் புகழ் பேசவைத்தான் புதுமையிற் புதுமை கண்டான். தந்தையாய், தாயாய், ஞானத் தத்துவக் குருவாய், தெய்வத் தந்திரத் துணைவராகி தேசுற்ற புதிய வாழ்வைத் தந்தநம் ஆன்ருேரெல்லாம் - திரமாய்ப் போர்க்களத்தில் அந்த நாள் ஆவியீந்த ஆயிரங்கோடி வீரர், 57