பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நோஞ்சான்கள் நெஞ்சதிர நிசக்கவிதை தீட்டியவன். அந்நியரின் ஆட்சியிலே ஆணடிமையாய்க் கிடந்த அநியாய பாரதத்தின் அவலமிகு விஷக்காட்டின் அடிவேரில் ஆண்மையெனும் அக்கினியை மூட்டிவிட்டு அடிமைப் பேய் உயிர் சுட்ட ஆண்கவி எம்பாரதியே! ஆன்ற தமிழ்க் கவியரசன் ஆஸ்தானத்தை அணிசெய்ய வந்துள்ள கவிச்செல்வங்காள்! ஈன்ற தவத்தாய் எமது தெய்வ நாட்டை எந்நாளும் காக்கின்ற இளஞ்சிங்கங்காள்! தோன்றியெழும் தினம் புதிதாய் சூர்யஜோதி யங்கும் சுடர்கின்ற தன்மைபோல சான்ருேளின் சங்கம்போல் சத்தியம்போல் தேச மகாகவிராசன் நாமம் வாழ்க. 蜥 肇 李 சுப்ரமண்ய பாரதியார் என்ன செய்தார்? எப்போதும் போல்தானே எழுதிவைத்தார்! எனப் பேசும் படித்திட்ட பண்டிதர்க்கு படிக்காத ஏழை ஒரு வார்த்தை சொல்வான் கேளப்பா ஏட்டறிவுப் புலவனே கேள். பாரப்பா பண்டிதனே நன்முகப் பார். 77