பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராட்டு கவி கு சோமு’ திரு. எஸ். டி. சுந்தரம் அவர்களின் கவிதை நூலேப் பார்த்ததும் இந்த ஆசிரியருக்குப் பழமைப் பண்போடு தோய்ந்த வழிமுறைகளில் எவ்வளவு பிடிப்பு இருக்கிறது என்பதுகண்டு இன்பமுற்றேன். அன்னே, தந்தை, குரு, தெய்வம், நாடு என வகைப் படுத்தி ஆரம்பமாகிறது. இந்த நூல் : இவ்வரிசையமைப்பி லேயே நூலாசிரியரின் இதயப்பண்பு துலங்குகிறது என்று: சொன்னல் பொருந்தும் ! உலகமெலும் ஓவியமே ! உறைந்துவிட்ட தீப்பந்தே கலகமிலா வான் சுழலும் காக்தமணி மண்டலமே! கலிகண்ட நாடகமே கயிறில்லாப் பம்பரமே கலைக்கன்னி உெையண்ணிக் கவிபாடி ஆடுகிருள்! என்னும் வரிகளைப்போலே இந்த நூலிலுள்ள கவிதை களில் என்னைக்கவர்ந்த பாடல்களும், வரிகளும் சொற். கோவைகளும் பற்பல ! சிங்க காதம் கேட்குது : சீனகாகம் ஓடுது ! என்ற பாட்டு, சீன ஆக்கிரமிப்புச் சூழ்நிலையில் வெற்றிக் குரலாக ஒலித்த வரலாற்றை நாடெல்லாம் அறியும். மனிதனுக வாழத் தெரியாதவன் கவிஞகுக வாழ்வது எப்படி? பண்புள்ள மனிதன் பண்புள்ள கவிஞளுக மலர் வதை வணங்குகிற நாடு நம் தமிழ்தrடு. இந்த உண்மையை எண்ணத்தாலும், சொல்லாலும், நடத்தையாலும் நாள். தோறும் கடைப்பிடித்து வருகிற பண்பாளர் திரு. சுந்தரம் ! அவருடைய முயற்சிகள் வெல்லவேண்டும் என்று விரும்புவது மனமுவந்த ஓர் மகிழ்ச்சியாகும். .ே ப்ா. சோமசுந்தரம்.