பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இட்லி கப்பன் இட்லியை எண்ணிடும் வேளையிலே-ஒரு இனிமை ஜெனிக்குது காலையிலே-தேங்காய் சட்னி எனச்சொலும் நாதத்திலே-கார சாரம் பிறக்குது நாக்கினிலே உளுந்து கிடைக்காத தொல்லையினுல்-தின்ற உப்பில்லா சப்பாத்தி அல்லலில்லை-இன்று அளந்து தருகின்ற ஆக்டிங் அரிசியால் ஆறேழு இட்லிக்கு மோசமில்லை. எள்ளுப் பொடிஇன்ப சாரத்திலே-மனம் கொள்ளை கொள்ளும் இளங்காரத்திலே-உள்ளே தள்ளுகின்ற அலங் காரத்திலே-அவை: - அள்ளுகின்ற பசிவீரத்திலே (இ) - (விருத்தம்) யாமறிந்த உணவுகளில் இட்லியைப்போல் இனிதாவ தெங்கும் காணுேம் தேமதுரச் சுவைகாணு ஜாங்கிரிகள் பதிர்பேணி பாதம்அல்வா நாமமது ஸ்வீட்டென்று நம்மை ஏய்த்து நாக் அறுப்பதனுல் என்ன லாபம்? சேமமுறசிற்றுண்டி செழிக்க வேண்டில் சேர்ந்தெல்லாம் இட்லிகள்ை ஆதரிப்போம். 149