பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏனின்னும் எழுதுகிருன்? "காசில்லாக் கவிராயா கண் திறந்து'உலகைக்காண் கடன்பட்டுச் சாகாதே காசுக்கடை வைக்கும் கள்ளவட்டிச்சந்தையிலே கவிதைக் கடைவைக்க கட்டிடமோ ஈங்கில்லை. கவிதை கவிதையென காலமெல்லாம் கதறிவிட்டு காலன் கதவிடிக்கும் கடைமூடும் திருநாளில் காச நோய் உன்நெஞ்சைக் கத்தரிக்கும்.வேளையிலே ஊசலிடும் உயிர்ச்சோதி உடல் விட்டு ஏகாமல் ஆசைக் குலே நடுங்க அனலால் உடல் கருக 153