பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாதக்குளிர் நதியே! நல்லமுதே! நாடி நரம்பெங்கும் நல்லிதய் மூச்செங்கும் கூடி மகிழ்வித்துக் குளிர்விப்ப்ாய் உயிரெல்லாம் ஆடி அனுபவிக்கும் ஆனந்த்நாத மழை தேடி யுனையழைக்கத் தேரேறிப் போயினையோ? தேடியுனே நாடித் தெற்குவரும் நண்பருக்கு பாடி விருந்தளித்துப் பசியாற. அமுதிட்டு மோடி கிறுக்கேற்றும் மோகனப் புன்னகைதருவாய் தோடியிசை தேடித் திருமகனே சென்ருயோ?. உருகாதா என்ற இசை உயிர்குழையும் நாதத்தில் உருகிவரும் உன்னுள்ள வெள்ளத்து இனிமையிலே 165