பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வங்கத்து மாதாவே! வளமான பாரதத்தில், தங்கிய நற்பெருமைகளை தமிழ்போலச் சொல்லிவரும் இங்குனது இதயத்தே ஈட்டியிடும் ஈனர்களின் சங்கத்தை வேட்டையிட்டு சாந்தியுறத் தாமதமேன்? அந்தோ உன் நிகரற்ற அணியான வீரமணிச் சந்ததியே கதியற்றுச் சந்தியெலாம் சாய்கின்ருர் சந்தையிலும் விலையாகாச் சருகாக நாறுகிருர் இந்தவினை செய்வாரை என்ன செய்யப் போகின்ருய்? எத்தனையோ பேரறிஞர் இளங்காதல் வாலிபர்கள் தத்துவத்தின் ஆசிரியர் தலையெல்லாம் பனங்காயாய்க் குத்திவிட்டுப் பழிபருகும் கொடுஞ்சாதிக் குடியர்களின் இரத்தகங்கை அலைமோத நீகுளிக்கத் தாமதமேன்? ஜாதிகுல நோய்தீர்த்து ஜகவீரர் நேதாஜி