பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றழகு போனபின்பு ஆற்றுார் பெயரெதற்கு? சூட்டுகின்ற மலரில்லா சுமங்கலிக்கு என்னபெயர்? ஆற்றுாரை ஆட்டுர்என் ருங்கிலத்தான் சொன்னதை * ք:-- ஏற்றுவிட்டீர் போலும் ஏளனமா செய்கின்றீர்! காட்டை அழித்திர்கள் கடுந்தும்பல் மலைமேகம் ஒட்டம் பிடித்தமுகில் உமையஞ்சி ஒதுங்கியதால் காற்றுப் பருவமழை கனவாகிப் போனதல்ை கீற்றுத் தென்னையெலாம் கிழடாகிப் போன்துவோ? மோட்டார் மின்சாரம் மெசின்பம்பு தான்வைத்தீர்! கூட்டாகப் பயிராக்கிக் கொள்ளுகிறீர் முப்போகம் கேட்டால் பணமாக்கல் கெடுதலோ என்பீர்கள்! வீட்டுக்கோ குடிதண்ணீர் விலைபோட்டு வாங்கிடுவீர்! எப்போதும் தித்திக்கும் எங்களுர் தண்ணீரை இப்போது ஆவலுடன் அருந்தினேன் அப்பப்பா! உப்புக்கஷாயமாய் உயிரெல்லாம் ஆட்டியது. தப்பன்ருே இப்படிநீர் தண்ணீரைச் கொல்லுவது? கங்கைதனக் கெடுத்தால் காசிக்குப் புகழ் உண்டா? மங்கைதனைக் கெடுத்த மாந்தர்க்கேன் மரியாதை? ங்களுக்கு உயிருட்ட ஓடிவந்த ஊராற்றை செங்கல்லின் சூள்ையெனச் சுட்டுவிட்டீர் அய்யய்யோ!