பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவி பாடும் கலைக்கன்னி ! உலக மெனும் ஒவியமே! உறைந்து விட்ட தீப்பந்தே! கலக மிலா வான் சுழலும் காந்த மணி மண்டலமே! கலி கண்ட நாடகமே கயிறில்லாப் பம்பரமே! கலைக் கன்னி உனையெண்ணிக் கவி பாடி ஆடுகிருள்! ஆடிய தோர் அதிகார ஆதிக்கப் போர் வெறியர் பேடியரின் யுத்தத்தால் பெருந்துயரப் புண்பட்டு வாடி விட்ட உன் வாழ்வே. வற்றி விட்ட உள மகிழ நாடி வந்து நலஞ் சேர்க்கும் . நற்கலையாள் பாடட்டும்!