பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாபாரி கவி யானுல் விவசாயி என் வைான்? சாயாத கதிர்த் தலையை சாய்வித்துச் சாரத்தால் ஓயாது உயிருட்டும் உத்தமனின் உழைப்பெல்லாம் காயாத கானகத்தில் களியூட்டும் கவிதை மொழி! மொழி மதுர மேதறியான் மரபறியான் முது புலமை வழி யறியான் வீண்வாத வம்பறியான் வாய்பேசும் பழியேதும் அவனறியான் பாருயிரின் பசியறிவான் அழியாத அமுது படி அளந்திடுவான் ஆதிகவி!