பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமரமகா கவியண்ணன் செறிவுள்ள ஞானத்தின் சீர்மிக்க எண்ணத்தின் திறமுள்ள அரசியலை தெய்வீக ராஜ்யத்தை அறமுள்ள நாள்வரையும் அசையாமல் ஆக்கிவிட்டான்! தத்துகின்ற தவளேமனம் தாவுகின்ற குரங்காகி சுத்தியுளம் சோர்கின்ற சோகத்தின் வேளையிலே புத்தியெலாம் வசமாக்கிப் போதை கொள்ள வைத்துப்பின் சுத்த மெய்ஞானத் தெளிவுதரும் ஞானியவன்! தத்துவத்தின் ஆசிரியன் தருமத்தின் செங்கதிரோன் மெத்தச்சுடர் வீசும் மேலான மாநகரில் சக்திமிகு செங்கோலின் சாந்திமிகு அரசியலில் சத்தியத்தின் சாரமெலாம் ஜெயராம ராஜ்ஜியமாம்! xxxi