பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னியின் காவியம்! அன்பொளிவீசும் உயிர்வழிந்தாடும் விழியில்வான் கண்டேன்-அவள் தண்ணிதழ் ஓசை இசையினில் வாணியின் வீணையை நான் கேட்டேன்-பசும் பொன்னுடல் வாரிவிசிறிய ஜோதியில் வாட்டிய குளிர் உணர்ந்தேன்பெண்ணவள் அருகே புன்னகையொடுவர புத்தரையே தொழுதேன்-தன்னை அந்நியம் என்று எண்ணவே இல்லை என்னுயிர் உறவாளுள்-எழில் சின்னக் கரங்களில், செம்மலர் விரல்களில் சிந்திய அழகமுதால்-நல்ல எண்ணமெனும் பல வண்ணங்குழைத்தே தன்மொழித் ேதன்சுவையால்-நிதம் என்மன ஏட்டினில் எழுதிய காவியம் எண்ணில் அடங்காவே-சுவைக் கண்ணுெளி காட்டிய, கன்னியின் காவியம் காலவிண்ணுேவியமே? Lxii