பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையக ஊஞ்சல் ! சூரிய சந்திர தாரகை யாவும்நம் திருமண மண்டப தீபங்களாம். வானகமே நம் மாளிகையாம்-இன்ப வையக ஊஞ்சலில் ஆடிடுவோம்! ஊர்வலமாக நாம் வரும் போது-இவ் வனமே வாத்தியம் மீட்டாதோ? மாருத ஒசை மெல்லிசை பாடும், மாமழை பன்னீர்து விடுமே. தேன் மலர்த் தேவதை தென்றல் எனும் தட்டில் சீர்கொண்டு மோகனம் பாடிடுமே! தாவி எழும் புயல் வேகத்திலே-அது தாழ்ந்துவிழும் மலைமோகத்திலே-நம் ஆவி எழும் அன்பின் காந்தியிலே-அது ஆழ்ந்துயரும் இன்ப சாந்தியிலே! Lxiii