பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானி;- மோனத்துப் போதையிலே மதிமயங்கு மாக்கவியே! வேதாந்தக் கதைகட்டும் விதிகெட்ட வாக்கரசே! வானத்தைச் சாடுதடா! வன்மையுறு விஞ்ஞானம் பாலத்தில் ரயில் போக பாதையிலே கார் தாவ ஆழத்தில் பாயுதடா அணி அணியாய்க் கப்பல்கள். மலையருவி வீழ்ச்சிகளை மின்சார மாய்மாற்றி மாயப் புவி மீதென் மதிபோலே மின்னுதடா! மேதினியை ஆட்டுதடா, மேன்மையுறு விஞ்ஞானம் காலத்தை வெல்லுதடா கனவேக விஞ்ஞானம். கவிஞன்.- விஞ்ஞான வலிவின்றி வான்பறவை தாவுதடா! வண்ணவண்ண மீனுக்கு வழிபோட்டுத் தந்ததுயார்? கானுலவும் பிராணிகட்கு கல்லூரி வைத்தது யார்? பகுத்தறிவுப் பகையின்றி பண்புடனே வாழுதடா! வீண்பெருமை பேசுகிருய் வீம்பு செய்யும் மானிடனே! 5