பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப் பறந்து வந்து போர்ப் படை? புகை கக்கிய விமானங்கள் விஷக் குண்டு மழையைப் பொழிந்தன! அதோ! அதோ! பறந்து வருகின்றன! பூமியின் கர்ப்பத்தைப் பிளந்து புகையாக்கச் செங்குத்தாகக் கீழ் நோக்கிப் பாய்ந்து விழுகின்றன அணுக் குண்டு கள்! ஹைட்ரஜன் நாசங்கள்! வானத்தின் கோளங்கள். விண் மீன்கள் யாவுமே நிலை தடுமாறிப் பிரிந்து ஒடுகின்றனவே! சூரியப் பிர காசம் எங்கே? சந்திரன் உதயம் எங்கே? கதிர வனையே நீலநிறமாக்கி விட்டது விஷப்புகை! உல கின் ஒளி மங்கி விட்டது! எங்கும் இருள்! ஒரே வெடித் திடல்! வேட்டொலி! புகை எழுப்பினன் விஞ்ஞானி. அதற்கொரு புகைப் போக்கியைக் கண்டு பிடித்தான அவன்? இல்லை! அழிக்கத் தெரிந்தவ னுக்கு ஆக்கத் தெரியாதே! எங்கோ அசரீரியாக இருந்த ஒரு கவிஞன் இந்தப் பிரளய காலத்தையும் காண்கிருன்! ஊழிக் கூத்தைக் கண்டு உளம் நடுங்கு கிருன்! அழிவின் காட்சி சில நாட்களில் மறைந்து விடும். ஆனால் இதோ இக்காட்சியைக் கவிதையிலே திட்டிய கவிஞனின் உயிர்ச் சித்திரம் என்றென்றும் திலக்கும்! பாவிகளுக்கு ஒரு பாடமாகும்! யுத்த வெறியர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகும். அலைகடல் ஆவியாகி ஆகாயம் நோக்கிப் பாயும்! மலையுடல் திமிங்கிலங்கள் மெழுகென எரிந்து மாயும்! 9