பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை திருவாளர் எஸ். டி. சுந்தரம் அவர்களைப் பல் ஆண்டு களாக நான் நன்கறிவேன். அவர் பண்டைய இலக்கியங் களின் வான் நயங்களைப் பருகி, அவற்றில் ஆழ்ந்து திகளத் தவர் என்பதில் யாதோர் ஐயமுமில்லே. தமிழின் தொல் மரபு ஓராது யாதொரு வரம்புமின்றிக் கவிதை புனேயும் திருக்கூட்டத்தை அவர் சார்ந்தவரல்லர் என்பது அவர் பட்ைத்த வானமுத மென்னும் கவிதைத் தொகையின் வாயிலாக மிளிராமற்போகாது. பழுத்த சொல்லாட்சியும், உயர்ந்த கற்பனைச் செறிவும், சிறந்த நாட்டுப் பற்றும், உணர்ச்சி வெள்ளப்பெருக்கும், சமுதாயச் சாக்கடைத்தேக்க ஊழல்களே நோக்கி வெகுண்டு கூறும் அவர் தம் மொழிகளும், தியாகமே உருக்கொண்டு நம்முன் நடமாடின, சான்ருேர்களின் இயல்பைச் சித்தரிக்கும் அவருடைய பண்பாடும், கயவர்களே அம்பலப்படுத்தும் அறச் சீற்றமும், சீனப் படையெழுச்சியாம் காட்டாற்றிற்கு அணபோட அவர் எழுப்பும் வீரக்கனலும், அவருடைய நகைச்சுவையும் இந்நூலில் கோயில்கொண்டுள்ளன. இயற் கையின் எழில் பொழியும் காட்சிகளும், அம்ர ஒலிகளும் அவருடைய உள்ளத்தைக் கொள்ளே கொள்ளுவதை உணர் கின்ருேம்.

  • வண்ணவான் திரையிலே வளர்பிறை

ஒளிகாட்டி’ -

  • கடையூழிக் காலக் கனலைக்

கிக்கி யெழும்"