பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் சொல் மாட்சி கணக்கின் ஆராய்ச்சி, கவிஞர் மனிதர்க்கே கல்லறை கட்டிடவோ? கலையின் திருக்கோயில், கடவுள் நிலைகாளுக் கொலையின் கல்லறையில் கொலையைக் கும்பிட்டான் கொலையின் பூசாரி குலமோ மனிதகுலம்! இலையோ இதயத்தில் இரக்கம் இலையோடா? இந்தச் சோகமான பூகம்பத்துக்கு அப்பால் வெகு தூரத்தில் வானில் பறந்தபடியே கவனித்த சில விஞ்ஞானிகள் கனலைத் தாளாமல் விமானத்தில் கிளம்பி காற்றுவரும் இடத்தை நாடிப் பறந்தனர். பறந்துகொண்டே இருந்தனர்...கடைசியாக அவர்கள் அமைதியின் சூழ்நிலையை அடைந்தனர். அவ்வேளை சமரசம் என்றதொரு சொல்லின் பொருளேபோல் தொலைவில் வீசியது தென்றல் சீதளமாய்! அலேயுடன் அமுதநகை அசைந்தது மறுகணமே! 14