பக்கம்:வானமுதம் (கவிதை).pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லையும் தெரியவில்லை! ஏங்கிய இதயத்துள்ளே எழுந்தது கோடியின்னல்: கற்றநூல் வித்தை யெல்லாம் கலககத்தைத் திர்க்கவில்லை. காவியப் புலமை மிக்க கவிதையும் உதவவில்லை. சாத்திரச் சமயங் கூறும் சதகோடி தத்துவங்கள் சங்கடம் வந்தபோது சரியாகப் புரிவதில்லை. கண்ணுண்டு காட்சியில்லை, கருத்துண்டு கவனமில்லை, கடலுண்டு அலேயே இல்லை, காரிருள் அச்சக்காட்டில்! கடவுளின் தினேவு கூட கரைந்தது அந்த வேளை கடுங்குளிர் பணியில் வீழ்ந்த கருங்குயில் போல வீழ்ந்தேன்! 19