பக்கம்:வானொலியிலே.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தகுதியும் திறமையும்

13

எங்களுக்குத் திறமையே முதல் தேவை என்பது எப்படி நேர்மையாகும் ? படிக்குந் தகுதிவரை படிக்க வைத்த குடும்பங்களின் கதியும் என்னாகும்? தகுதியிருக்கும் போதுகூடத் திறமையில்லே என்று கூறுவது தப்பா ? அல்லவா ?

ஒரு நாட்டினர் திறமையுடையவர்கள், மற்றொரு நாட்டினர் திறமையற்றவர்கள் என்பதையாவது, எங்காவது எவராவது கேள்விப்பட்டிருக்கலாம். ஒரு வகுப்பினர் திறமையுடையவர்கள், இன்னொரு வகுப்பினர் திறமையற்றவர்கள் என்பதை இந்த நாட்டில்தான் கேட்க முடியும். திறமையைப்பற்றி நான்கு பிரிவுகளாகச் சொல்லப்பட்டு வருகின்றது. 1. பிராமணர். 2. பிராமணரல்லாதார், 3. பிற்போக்கடைந்தவர், 4. தாழ்த்தப்பட்டோர். இவர்களுக்குத் திறமைகளும் வரிசைக் கிரமமாக இருக்கிறது. என்று சொல்லப்படுவது உண்மையாகுமானல், அவர்கள் வாழுமிடங்களும், சுற்றுச் சார்புகளுமே காரணமாக இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி இருந்தால், அக்கிரகாரத்திலிருந்து சரி பாதிப் பேர்களே சேரிக்கும், சேரியிலிருந்து சரி பாதிப்பேர்களே அக்கிரகாரத்திற்கும் அனுப்பி சுற்றுச் சார்புகளையும், சூழ்நிலைகளையும் ஒன்றாக்கித் திறமையையும் சமமாக்க வேண்டியது அரசாங்கத்தினுடையவும், தேச பக்தர்களுடையவும், பொதுநல ஊழியர்களுடையவும் முதற்கடமையாக இருக்கவேண்டும்.

திறமையை எண்ணக்கூடாது. வகுப்புவாரியாகத்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்ற விதி இருக்குமிடங்களிற் கூட திறமை தலே விரித்தாடுகிறது. பிராமணரல்லாதார் என்ற தொகுதிக்கு ஆட்கள் தேவைப்படும்போது தமிழ் நாட்டார் அல்லாத வட நாட்டவர்கள் நுழைக்கப்படுகிறார்கள். திறமை செய்கின்ற கொடுமை இது. இக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/14&oldid=487620" இலிருந்து மீள்விக்கப்பட்டது