பக்கம்:வானொலியிலே.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 வானெலியிலே

கொடுமைகளை மருத்துவக் கல்லூரிகளிலும் ரயில்வே தொழிற் கல்வி நிலையங்களிலும் நன்கு காணலாம். வகுப்பு வாரியாகவும் ஜில்லா வாரியாகவும் பிள்ளேகளைச் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் இஞ்சினியரிங் காலேஜில் உண்டு. திருச்சி ஜில்லாவிலிருந்து 1942-ல் கிறிஸ்தவ வகுப்பினர் இருவர் மனுப் போட்டிருந்தனர். ஒருவர்தான் தேவை என எடுத்துக் கொண்டார்கள். தேர்ந்தெடுக்கப் பட்டவன் படிக்கப்போகவே இல்லை. அதற்குப் பதிலாக அடுத்தபையன் வர விரும்பியும் சேர்க்க மறுத்துவிட்டார்கள். அந்த வருஷத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மொத்தம் 80 பேர்’ அதில் 10 பேர் படிக்கவரவில்லை. அந்தக் காலி ஸ்தானங்கள் 10-க்கும் பிராமணப் பிள்ளைகளே தேர்ந்தெடுக்கப்பட்டனர். திறமையே முதல் தேவை என்பதன் பலன் இது.

என்னுடைய முடிவான கருத்து என்னவென்றால், திறமை முதல் தேவையுமில்லை. இரண்டாம் தேவையுமில்லை. திறமை என்பதே அடியோடு தேவையில்லை என்பதுதான். திறமையுடையவர்களை எல்லாம் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கி வைத்துவிட்டு, திறமையற்றவர்களை மட்டுமே கல்லூரிகளிற் சேர்த்துப் படிக்கும்படிச் செய்ய வேண்டும். அப்போதுதான் கையும் காலும் கும்பிப்போய் வயிறுமட்டும் பெருத்து வலுக்குறைந்த குழந்தையைப் போலக் காணப்படும் தமிழ் நாடு எல்லாச் சமூகங்களும் உயர்ந்து வலுவான நாடாகக் காட்சியளிக்க முடியும்.

திறமையற்றவர்களைத் திறமையுடையவர்களாகச் செய்வதுதான் கல்லூரிகளின் முதல் வேலேயாக இருக்க வேண்டும். அதைச் செய்ய இப்போதுள்ள கல்லூரிகளுக்குத் திறமையில்லாவிடில் அக் கல்லூரிகளை இடித்துத் துரளாக்கிவிட அரசாங்கம் உத்தரவு போடவேண்டும். அவ்வாறு செய்தால் கட்டிடங்களிருந்த நிலத்தில் கலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/15&oldid=490097" இலிருந்து மீள்விக்கப்பட்டது