பக்கம்:வானொலியிலே.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'தகுதியும் திறமையும்

17

'


இந்தவிவாதத்தில் திறமையற்றவர்கள் என்று சொல்லப் பட்டு வந்தவர்கள் அனைவரும் உண்மையில் திறமையற்றவர்கள் அல்ல. அவர்கள் திறமையற்றவர்களாக இருந்தால், உயர்தரப் பள்ளிகளில் படித்துத் தேறி, கல்லூரிகளில் படிக்கத் தகுதியுள்ளவர்களென்று அரசாங்கத்தினரால் வழங்கப்பெற்ற உரிமைச் சீட்டுடன் கல்லூரியின் வாயிற் படிவரை வந்திருக்க முடியாது அல்லவா ? இவர்களேத் திறமையற்றவர்கள் என்று கூறுகிறவர்களெல்லாம் உண்மையைக் கூறுகிறவர்களாக இருக்க முடியாது. அவர்களைக் குருடர்களென்றும், செவிடர்களென்றும் கூறிவிட முடியாது. போராட்டமெல்லாம், குறைந்த திறமை, அதிக திறமை என்பதைப் பொறுத்ததாகும். கேள்வி எல்லாம், " தேவைக்குத் தகுந்த திறமையுள்ளவர்களை விலக்கிவிட்டுத் தேவைக்கு அதிகமான திறமையுள்ளவர்களேத் தேடி இழுப்பது ஏன் ? என்பதுதான்.

முன்னேற்றமடைந்த வகுப்பினர் பிற்போக்கடைந்த மக்களைத் திரும்பிக்கூட பாராமல் விரைந்து கடப்பது ஒரு தவறு. அவர்கள் தாங்களாக முன்னேறி வந்தும் கை கொடுத்து உதவாமல் இருப்பது அதைவிடத் தவறு. அவர்களாகத் தட்டுத் தடுமrறி மேலேறி வரக் கண்டதும் ஆதரிக்காமல் சும்மா இருப்பது பெருந்தவறு. சும்மாவும் இராமல், முன்னேறி வந்தவர்களே மறித்துப் பிடித்துக் கீழே தள்ளுவதோ மன்னிக்க முடியாத பெருந்தவறாகும்.

திறமையே முதல் தேவை என்ற கொள்கை இக்நாட்டில் கையாளப்படாதிருந்தால் ஜாதிப் பூசல்களும், வகுப்பு வெறுப்புகளும் இவ்வளவு விரைவாகத் தோன்றியிராது. வெளிப்படையாகக் கூற வேண்டுமானல், ஜஸ்டிஸ் கட்சி தோன்றியதற்கும், முஸ்லிம் லீக் பரவியதற்கும் தாழ்த்தப்பட்ட பெடரேஷன் வளர்ந்ததற்கும் 'திறமையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/18&oldid=970553" இலிருந்து மீள்விக்கப்பட்டது