பக்கம்:வானொலியிலே.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதி முறை 31

அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற கால் வகைப் பிரிவு பண்டைய தமிழ் நாட்டில் இருந்ததுண்டு. இதுவும் தொழிலின் பொருட்டு பிரிக்கப் பெற்ற தொழில் முறையே தவிர பிறப்பின் பொருட்டு பிரிக்கப் பெற்ற ஜாதி முறையல்ல. சாலியவாகனனப்பற்றிக் கேள்விப்பட்டிருப் பீர்கள். அவன் சட்டி பானைகளைச் செய்தபோது அவன் பெயர் வேளான். வேள் என்பது மண். வேளான் என்பது மண் தொழில் செய்வோன் என்ருகிறது. அவைகளை விற்கும்பொழுது அவன் வணிகன் ஆன்ை. போரிட்ட பொழுது வீரன் ஆன்ை. தண்டித்தபோது மறவன் ஆன்ை. ஆண்டபொழுது அரசன் ஆனன். முடிதுறந்து அறவொழுக் கத்தைக் கைக்கொண்டிருந்தால் அந்தணன் ஆவான். இது தமிழ் வழக்காகும். இவற்றையே பிரம்ம, கடித்திரிய, வைசிய, சூத்திர என வடமொழியாளர் வகுத்து கால் வகைச் சாதியெனக் கூறிப்பிறப்பின் பொருட்டு வழங்கினர். இவ் வழக்குப்படி ஒருவனுக்குப் பிறப்பின் பொருட்டு வழங்கிய ஜாதிப் பெயரானது அவன் எத் தொழிலைச் செய் தாலும் மாருது. மாற்ற முயன்ருலும் முடியாது.

இன்றையத் தமிழ் நாட்டுச் சிற்றுார்களில் 'பள்ளுபறை பதினெட்டு சாதி " என ஒரு பழமொழி வழங்கப்பெற்று வருகிறது. இதுவும் தொழில் முறை கருதி குறிப்பிடப் பட்டதே தவிர, பிறப்பு முறை கருதி வகுக்கப் பெற்றதல்ல. இது உண்மை.

உழவுத் தொழில் செய்ய நிலத்தின் பள்ளத்தைத் துார்ப்பவர் அல்லது பள்ளஞ் செய்பவர்-பள்ளர். அரசனது கருத்தை பறையடித்து அறிவிப்பவர் பறையர் எதிரியின் கள்ளச் செயலே அறியும் அறிஞர்-கள்ளர் மறக் கருணை கொண்டு தண்டிப்பவர்-மறவர். காட்டைப் பாது காப் பவர்-காவற்காரர். எதுவும் உடையவர்-உடையார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/22&oldid=646755" இலிருந்து மீள்விக்கப்பட்டது