பக்கம்:வானொலியிலே.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜாதி முறை 23

களும் கூறியது உண்மையானல், இவர்கள் முன்பு ஒரு சாதி, இப்போது அரைச்சாதி ஆக ஆள் ஒன்றுக்கு ஒன்றரைச் சாதி ஆகிறது. இதை அந்த ஸ்வீடன் தேசத்துப் பாதிரி யார் அறிந்திருந்தால் எவ்வாறு கூறியிருப்பார்? இந்தியாவில் உள்ள 36 கோடி இந்துக்களில் 39 கோடி ஜாதிப் பிரிவுகள் உண்டு என்றுதான் கூறியிருப்பார் !

இத்தனே ஜாதிகள் இக்காட்டிலிருந்தாலும் எந்த ஜாதியும் தன் ஜாதிப் பெருமையை இழக்கவோ, தன் ஜாதி தாழ்ந்தது என ஒப்டவோ விரும்புவதில்லை. 11 ஆண்டு களுக்கு முன்பு பறையர்களின் சேரிக்குச் சென்றிருந்தேன். அங்கு அப்போது சாதிக் கூட்டம் கடந்தது. இந்த வழக்கம் நமது சாதியில் உண்டா? என்று பலர் கோபமாகக் கூச்சலிட்டனர். முடிவில் வேறு சாதியில் கலப்பு மணம் செய்த ஒருவனே சேரியை விட்டு விலக்கிவிட்டனர். இக் நிகழ்ச்சியானது இன்னும் என் உள்ளத்தை விட்டு மறைய வில்லே. இதிலிருந்து எது உயர்ந்த சாதி ? என எவர் முடிவு கட்டிக் கூறுவது? என்பது எனக்கே விளங்கவில்லை.

ஜாதி முறையில்ை மக்கள் பிளவுபட்டு தனித் தனிக் கூட்டம் ஆனர்கள். அவ்வளவோடு கிற்கவில்லே. ஜாதி முறையானது ஜாதிக்கு ஒரு பட்டம் ஜாதிக்கு ஒரு அடை யாளம்: ஜாதிக்கு ஒரு தொழில் ஜாதிக்கு ஒரு வழக்கம் : ஜாதிக்கு ஒரு திே ஜாதிக்கு ஒரு தெரு : ஜாதிக்கு ஒரு கடமை ஜாதிக்கு ஒரு உரிமை ஜாதிக்கு ஒரு உணவு என்று கூட வகுத்துப் பிரித்துவிட்டது. இதல்ை மக்கள் உள்ளத்தில் தோன்றி யிருந்த அன்பு உணர்ச்சி அழிந்தது. ஒற்றுமை உணர்ச்சி குற்றுயிராய்க் கிடந்து மடிந்து போயிற்று. இக் காட்டில் நடைபெறும் கலகங் களுக்கும், குழப்பங்களுக்கும் ஜாதி முறையே பெரிதும் காரணமாக இருந்து வருகிறது. முடிவாகக் கூறவேண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/24&oldid=646760" இலிருந்து மீள்விக்கப்பட்டது