பக்கம்:வானொலியிலே.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் உறையூரும் 3 Í

நாகரீகத்திற்குக் காவிரி நீரையும் அடிப்படையாகக் கூறலாம். தமிழ் ராட்டு வாலாறு எழுதப்படும் பொழுது காவிரிக் கரையிலிருந்துதான் தொடங்க வேண்டும். தமிழ் நாட்டு வரலாறு மட்டுமல்ல. திராவிட காட்டு வரலாறும், இந்திய நாட்டு வரலாறும் ஆசியாக் கண்டத்தின் வரலாறும், உலக வரலாறுங்கூட இங்கிருந்துதான் தொடங்கியாக வேண்டும் எனத் தெரிய வருகிறது. எவ்விதம்? எனில், உலகில் முதல் முதலாக மக்கள் தோன்றியவிடம் கடற் கேரளால் அழிந்துபோன தமிழ் காட்டின் தென்பகுதியாகிய லெமூரியா என்றவிடமே என்ற முடிவிற்கு ஆராய்ச்சி யாளர்கள் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதனுல் உலக மக்களின் காகரிகத்திற்குக் காவிரிபுர் தொண்டு செய்திருக்கிறது என்று கூறலாம்.

இந்தியாவில் பல கதிகள் இருக்கின்றன. என்ருலும் சிறப்பு வாய்ந்த கதிகள் பத்து. இவை கங்கா, யமுளு, துங்கபத்ரா, கிருஷ்ணு, கோதாவரி என வடகாட்டு கதிகள் 5-ம், பெண்ணேயாறு, பாலாறு, காவிரி, வைகை, பொருணே என தென்னுட்டு நதிகள் 5-மாகப் பிரிந்தன. பாரதியார் அவர்கள் தென்னட்டு கதிகளைக் கூறும்பொழுது, ' காவேரி தென்பெண்ணே பாலாறு தமிழ் கண்டதோர் வைகை பொருணை நதி யெனக் கூறினர்கள். காவிரி, நதிகளின் நடுவிலிருந்தாலும், காட்டின் நடுவிலிருந்தாலும் அது பாட்டின் முதலில் பதிந்திருப்பது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. -

காவிரிக்கு யாறு என்று மட்டும் பெயரல்ல. ர்ே என்றும், புனல் என்றும், பொன்னி என்றும் பல பெயர்கள் இருக்கின்றன. காவிரி சூழ்ந்த நாட்டிற்கு நீர் நாடு என்றும், புனல் நாடு என்றும், பொன்னி நாடு என்றும் பெயர். காவிரிக்கும் காவிரி சூழ்ந்த காட்டிற்கும் உரியவனை சோழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/32&oldid=646778" இலிருந்து மீள்விக்கப்பட்டது