பக்கம்:வானொலியிலே.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரியும் உறையூரும் 37

வருதிப் புராணம் கூறுகிறது. முதல் பராந்தகன் 907 முதல் 958 வரை ஆண்டிருந்தான். 3-ம் பராந்தகன் 961 முதல் 969 வரையிலும் ஆண்டிருக்கிருன். மண்மாரி பெய்தது எவன் காலத்தில் ? எப்படி? என்பதை அறிய முடியவில்லை. சோழனுடைய மனேவி தப்பிப் பிழைத்துக் கரையேறிய விடத்திற்குத்தான் உத்தமி சேரி என்ற பெயர் வந்தது என்பது செவி வழிக் (கர்ணபரம்பரை) கேட்டுவரும் செய்தியாகும்.

16-ம் நூற்ருண்டு மத்தியில் உறையூரை ஆட்சி செய்த

சோழன் பாண்டி காட்டின்மீது படை எடுத்து வெற்றி பெற்ருன். தோற்று ஒடிய பாண்டிய மன்னன் விஜயநகர ராஜ்யம் சென்று அடைக்கலம் புகுந்து சோழனோடு சண்டை செய்ய அவர்களே அழைத்துவந்தான். இதன் பயனுக சோழகாடும் பாண்டியாடும் காயக்கர் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது. உறையூர் நகரத்தில் சோழர் ஆட்சிக்கும் பாண்டியர் ஆட்சிக்கும் 1559-ம் ஆண்டில் முற்றுப்புள்ளி வைக்கப் பெற்றது. தமிழ் மன்னர்கள் ஆட்சி வீழ்ந்த பொழுதே தமிழ் மக்களின் வாழ்வும் வீழத் தொடங்கியது. காவிரியும் உறையூரும் கண் கலங்கின.

1559 முதல் 1786 வரை உறையூர் காயக்கர் ஆட்சியில் அடங்கியிருந்தது. தென்னாட்டில் விஜயநகர ராஜ்யத்தை முதன் முதலாக கிலே நிறுத்தியவன் விசுவகாத நாயக்க வைான். திருச்சியில் காணப்படும் மேலக்கோட்டை வாயி லும், ஆண்டார் தெருவில் காணப்படும் கோட்டைச் சுவரும் காயக்கர்களின் காலத்தில் கட்டப்பெற்றவையாகும். காயக்கர் வழிவந்த கடைசி அரசி ராணி மங்கம்மாளின் மருகி மீட்ைசியம்மாளிடமிருந்து, திருச்சியும் உறையூரும் ஆற்காட்டு நவாப் இடம் சென்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/38&oldid=646788" இலிருந்து மீள்விக்கப்பட்டது