பக்கம்:வானொலியிலே.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பர்மாவும் அரிசியும்

பர்மா அரிசி என்றதும் என்ன அது ? எங்கே இருக் கிறது? எப்போது வரும் என்ற கேள்விகள் நம் நாட்டு மக்கள் கேட்கத் தொடங்கிவிடுவார்கள் என்பதை நான் இன்கறிவேன். அப்படிப்பட்டவர்களுக்கு சான் சொல்லுவ தெல்லாம், அவசரப்படவேண்டாம் : சிறிது பொறுமையா யிருங்கள் ' என்பதுதான்.

பர்மா அரிசியைப்பற்றி அறிந்துகொள்ளுமுன் பர்மா வைப்பற்றிக் கொஞ்சமாவது அறிந்து கொள்ளவேண்டும். பர்மா என்பது ஒரு அழகான காடு. அது கம் காட்டிற்கு வட கிழக்கு மூலையில் உள்ளது. கடல் வழியே 1000 மைல் தொலைவுள்ளது. மலைகளடர்ந்த நாடு, நீர் நிறைந்த காடு, செழிப்பு மிகுந்த காடு, தேவலோகத்தில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்று நாம் கேள்விப்பட்டிருக் கிருேமோ அவைகள் அனேத்தையும் நாம் பர்மாவில் காண லாம். அங் காட்டின் பரப்பளவு நமது சென்னே மாகாணத் திலும் சிறிது அதிகம் என்ருலும் அக்காட்டு மக்களின் எண்ணிக்கை ஒன்றே முக்கால் கோடி. சென்னை மாகா ணத்தில் நம் தமிழ்நாட்டு மக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் இரண்டரை கோடி ஆகும். -

பர்மாவின் அரசாட்சிக் காலம் 5. முதற் காலம் பர்மியர்கள் தங்கள் மன்னர்களால் ஆளப் பெற்ற காலம். இரண்டாவது காலம் அவர்கள் தமிழ்காட்டு மன்னர்களால் ஆளப் பெற்ற காலம். மூன்ருவது காலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட காலம். நான்காவது காலம் ஜப்பானிய ஆட்சிக்குட்பட்ட காலம். ஐந்தாவது காலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு மறுபடியும் திரும்பிய காலமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/40&oldid=646793" இலிருந்து மீள்விக்கப்பட்டது