பக்கம்:வானொலியிலே.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பர்மாவும் அரிசியும் 47

ஏற்றுமதி செய்தது. அதன் விற்பனைத் தொகையோ 3ே கோடி ரூபாய்கள். இதிலிருந்து டன் 1-க்கு 95 ரூபாய் என்றும் 50 படி கொண்ட அரிசி மூட்டையின் விற்பனே விலை சராசரி ரூ. ?-10-0 ஆகிறதென்றும் மக்குத் தெரிய வருகிறது. இந்த 35 லட்சம் டன் அரிசியில் 35 லட்சம் டன் அரிசி ரங்கூன் துறைமுக வழியே ஏற்றுமதி செய்யப் பெற்றிருக்கிறது. இதல்ை அத்துறைமுகத்தின் முதன் மையும் சிறப்பும் நன்கு விளங்கும்.

பர்மா அரிசியின் பெரிய வாடிக்கைக்கார நாடு இந்தியா தான். பர்மா அரிசியின் ஏற்றுமதியில் 100-க்கு 4 பங்கு வீதம் மேல்நாடுகளுக்குச் சென்றது. 5 பங்கு வீதம் சைன வாங்கியிருக்கிறது. பங்கு வீதம் ஜெர்மனிக்கு அனுப்பப் பெற்றிருக்கிறது. 8 பங்கு வீதம் பிராங்கும் சிங்கப்பூரும், மலேயாவும் சேர்ந்து வாங்கியிருக்கின்றன. 12 பங்கு வீதம் சிலோனுக்கு ஏற்றுமதி செய்யப் பெற்றிருக்கிறது. இந்தியாவோ 49 பங்கு விதம் வாங்கி இருக்கிறது. இதிலிருந்து பர்மாவில் நெல் விளைவிக்கும் கைத்தொழி லுக்கும் வியாபாரத்திற்கும் இந்தியா எவ்வளவு முக்கிய மானதாக இருந்து வருகிறது என்பதும், இந்திய மக்களின் உணவுக்குப் பர்மா அரிசி எவ்வளவு முக்கியமாக இருந்து வந்திருக்கிறது என்பதும் கன்கு விளங்குகிறது. இந்த இரண்டு நாடுகளுக்குள் உள்ள தொடர்பு எப்போதாவது அற்று விடுமானல், இரு நாடுகளும் துன்பத்தையே அனுபவிக்கும் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

4 வருட ஐரோப்பியப் போரும், 8 வருட பசிபிக் யுத்தமும், 9 வருட சைன சண்டையும் வெற்றிகரமாக முடிந்து இரண்டு வாரங்களே ஆகின்றன. ைேசக் கட்சி யினரின் இப்பெரிய வெற்றியைக் கண்டு உலக முழுதும் மகிழ்ச்சி அடைகிறது. இம்மகிழ்ச்சியில், இந்தியாவுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/48&oldid=646811" இலிருந்து மீள்விக்கப்பட்டது