பக்கம்:வானொலியிலே.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வியாபாரம் 57

பொருள்களே இறக்குமதியான துறைமுகத்தில் அடக்க விலக்குமேல் யுத்த காலத்திற்கு முன் என்ன இலாபம் வைத்து விற்ருர்களோ அதே இலாபம் வைத்து விற்கச் செய்திருப்பது. மூன்ருவது பிரிவு உள்காட்டு உற்பத்திப் பொருள்கள் எல்லாவற்றையும் 100-க்கு 30-க்கு மேல் இலாபம் வைக்காமல் விற்கும்படிச் செய்திருப்பது. நான் காவது பிரிவு மேற்கூறிய முப்பிரிவுப் பொருள்களிலும் மக்களுக்கு அவசியம் தேவைப்படுகிற பொருள்களேத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கு விலகளைக் கட்டுப் படுத்திக் கூறி அந்தக் கட்டுப்பாட்டு விலைக்கே விற்கச் செய்திருப்பது. இவை நான்கும் சிறந்த முறைகளில் வேலை செய்கின்றன. இவைகளைக் கவனிக்க சிவில் சப்ளே இலாகா என ஒரு புதிய இலாகாவை ஏற்படுத்தியிருக்கின்றனர். இந்த இலாகாவில் தலைமை அதிகாரிக்கு சிவில் சப்ளே கண்ட்ரோல் ஜெனரல் என்று பெயர். இவ் அதிகாரிக்கு புதிய அவசரச் சட்டப்படி பல அதிகாரங்கள் வழங்கப் பெற்றிருக்கின்றன. -

ஒரு வியாபாரியைக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான கணக்கு வைக்கும்படியும், வியாபார சம்பந்தமாக எல்லாத் தகவல்களையும் பதிவு செய்து வரச் செய்யவும், விரும்புகிற போது கணக்குகளைப் பார்வையிடவும், ஒரு கெஜட்டட் ஆபீசரை எந்த வியாபார ஸ்தலத்திலும் நுழைந்து சோதனை போடச் செய்யவும், சந்தேகத்தின் பேரில் சரக்குகளைக் கைப்பற்றும்படியும், இறக்குமதியாகும் பொருள்களுக்கு அடக்கவிலயை நிர்ணயஞ் செய்யவும், தேவையான ஊர் களுக்குச் சரக்குகளே அனுப்பிவைக்கும்படியும், குறிப்பிட்ட கபருக்கு விற்கும்படிச் செய்யவும், வினியோகத்தை கட்டுப் படுத்தும்படிச் செய்யவும் உத்திரவிட இந்த அதிகாரிக்கு முழு அதிகாரமுண்டு. $

குற்றம் செய்தவர்களே உடனுக்குடன் விசாரித்து அவர்களுக்குத் தனித்தனியே அபராதம் விதிக்கவோ,

4 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/58&oldid=646834" இலிருந்து மீள்விக்கப்பட்டது