பக்கம்:வானொலியிலே.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 வானெலியிலே

மனேயாகத் தோன்றும் சுருக்கமாகக் கூறுமிடத்து மக்கள் தங்கள் வாழ்வையே புது வாழ்வாகத் தொடங்குவர் எனக் கூறலாம்.

புதிதாக விளைந்து வீட்டிற்கு வந்த கெல்லானது, அரிசி யாகும். புதிதாக விளைந்து வந்த கரும்பும் சர்க்கரையாகும். பாலேயும், நெய்யையும் பசுவும் தன் பங்காகக் கொடுக்கும். அழகிய பெண்கள் புனலில் மூழ்கி, புது ஆடை அணிந்து, பூக்களே முடித்து, புதுவளே பூண்டு, இவைகளே புதுக் கலத்திலே ஒன்ருகச் சேர்த்து, பொங்கலாகப் பொங்கி வழங்குவர். ஆடவர் அருந்தி மகிழ்வர். ஏழை மக்களுக்கு அன்பு கலந்து வழங்கியும் மகிழ்ச்சிப் பெருக்கடைவர்.

உழைத்த மக்கள் ஊதியமாகவும், வறுமை வாய்ப் பட்டவர்கள் கொடையாகவும் நெல்லும், கரும்பும் பெறுவர். ஏழை மனையிலும் செல்வர் மனேயிலும் இங்காளில் பொங்கல் பொங்கும். யாவரும் இனிப்புச் சோற்றை உண்டு இன் பத்தில் திளைப்பர். உழைத்த மக்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ச்சியடையும் திருநாளே இத் திருநாள். கெற்கதிரும், திங்கரும்பும் வயல்களில் முற்றி யிருக்கும்போது ஆண்களின் உள்ளம் மகிழும் ; அதைவிட அதிகமாகவே பொங்கல் குதித்துப் பொங்கும்பொழுது பெண்களின் உள்ளம் பொங்கி எழுந்து மகிழும்.

இப் பெருநாளும், திருகாளும் ஆகிய கங்காளில் தமிழ்ப் பெருமக்கள் தங்கள் தங்களின் மக்கள், மருமக்கள், உற்ருர் உறவினர் ஆகிய அனேவரையும் அன்போடும், முறையோடும் அழைத்து தங்கள் மகிழ்ச்சியில் அவர்களையும் பங்குபெறச் செய்து மகிழ்வார்கள். குடும்பத்திலுள்ள பெரியவர்களேக் கிழக்கு நோக்கி நிறுத்தி அவர்களின் திருவடி களில் அக்குடும்பத்தார் அனைவரும் வணங்கி எழுவார்கள். பெரியவர்கள் இளையவர்களுக்கு நல்வாழ்த்துக் கூறி மகிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/63&oldid=646845" இலிருந்து மீள்விக்கப்பட்டது