பக்கம்:வானொலியிலே.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

வானொலியிலே

விடாமலும் தடுக்கலாம். இந்த இரயில் பாதைத் திட்டமே நமது தேசீய போர்த்திட்டத்தின் முதல் திட்டமாகும்.

பெந்தைல் மாகாண மக்களுக்கு பணக் கஷ்டம் அதிக மாக இருக்கிறது. நாம் அவர்களுக்கு உதவி செய்தாலொழிய வேறு வழி அவர்கட்குக் கிடையாது. இது நமக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். மஞ்சூரியா மங்கோலியா இரயில் பாதைகளை இச்சமயத்தில் அமைத்துக்கொண்டு பிறகு அம்மாகாண பாங்குகளின் மூலம் அவர்கட்கும் பண உதவி செய்ய முடியும்.

ரஷ்யாவானது சைனா ஈஸ்டர்ன் ரயில்வேயை வலுவாக்கி அதன் மூலம் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் திட்டத்தை நிறைவேற்ற எண்ணியிருக்கிறது. இதற்காகவே கிழக்கிலும் மேற்கிலும் இந்த ரயில்வேயை ரஷ்யா நீட்டியிருக்கிறது. அது செய்யும் ஒவ்வொரு செயலும் நமது முன்னேற்றத்தையும், தென் மஞ்சூரியா ரயில் வளர்ச்சியையும் தடைப்படுத்தவே செய்யும்.

ஆகவே, ரஷ்யாவினுடைய தென் மஞ்சூரியாவின் முன்னேற்றத்தைத் தடுப்பதாக பாவனை செய்துகொண்டே, வட மஞ்சூரியாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்து அங்குள்ள சிறந்த மூலப் பொருள்களை அள்ளிக்கொண்டு வந்துவிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், சைனவின் செல்வாக்கைத் தெற்கே பரவவிடாமலும், ரஷ்யாவின் செல்வாக்கை வடக்கே பரவ விடாமலும், தடை செய்ய முடியும். இவைகளைச் செய்யும்பொழுது நாம் ரஷ்யாவுடன் வஞ்சனேயாகவே சிநேகமாயிருக்க வேண்டும். காட்டா மந்திரி சபையின் காலத்தில் மந்திரி பாரன் கோட்டா அவர்கள் " ஜாபி"யை ஜப்பானுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/73&oldid=490159" இலிருந்து மீள்விக்கப்பட்டது