பக்கம்:வானொலியிலே.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஜப்பான் மெயின் காம்ப்

73

வரவழைத்து ராஜ தந்திர உறவு பற்றிப் பேசியதும் இதற்காகவேயாகும்.

" டுங்கிலியோவிலிருந்து-ஜெஹோல் வரை நமது ரயில் பாதையைப் போடவேண்டும். அது 447 மைல் நீளத்தில் அமையும். இதற்கு 5 கோடி எண் செலவிட்டால் போது மானதாயிருக்கும். இது மிக மிக முக்கியமானதோடு ஜப்பானின் வருங்கால செல்வமுமாக இருக்கும். அந்த ரயில் திட்டம் நிறைவேறினால், அங்குள்ள ஏராளமான நஞ்சை நிலங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் மங்கோலியாவுக்குள் நமது ஜனங்கள் 3 கோடிப் பேர் குடியேற முடியும். 30 லட்சம் ஆடுமாடுகளை அங்கு மேய்க்கலாம். ஆடு மாடுகளின் ஏற்றுமதி வர்த்தகமும் இதனால் அதிகமாகும். ஜப்பானில் ஒரு ஆடு தருகிற கம்பளி மயிரைவிட அங்கு 3 மடங்கு அதிகமாகத் தரும். ஆஸ்ட் ரேலியாவின் கம்பளியைவிட அதிக நயமானதாக இருப்பதோடு விலையில் மலிவானதாகவும் இருக்கும். ரயில் வசதி ஒன்று இருந்தால்தான் நாம் இதை அடைய முடியும். உலகத்தின் மற்ற நாடுகள் இந்த இரகசியத்தை அறியுமுன்னே நாம் முந்திக் கொள்ளவேண்டும். இப்போதே அதிக தாமதித்து விட்டோம். பிரிட்டனும், அமெரிக்காவும் இதை அறிந்தால்,நம்முடன் போட்டியிட ஆரம்பிக்கும். அதற்கு முன்னே நிலைமையை ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும். ஆடு மாடு வர்த்தகமும், கம்பளிக் கைத் தொழிலும் ஜப்பானுடைய தேவைக்காக மட்டுமல்ல ; அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளுடனும் இவ்வர்த்தகம் செய்ய உதவும். இந்த இரயில் பாதைத் திட்டம் இதற்காகவே நிறைவேறியாக வேண்டும். இது அங்கு நிறை வேறுகிறதா? இல்லையா? என்பது வாழ்வதா? சாவதா ? என்பதையே பொறுத்திருக்கிறது.

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/74&oldid=490158" இலிருந்து மீள்விக்கப்பட்டது