பக்கம்:வானொலியிலே.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

வானொலியிலே

கூட்டுறவு நிலையங்கள் மூலம் கொரியர்களுக்கு பண உதவி செய்து, அவர்களே சைனாக்காரர்களிடமிருக்கும் நிலங்களை விலைக்கு வாங்கும்படிச் செய்ய வேண்டும். பிறகு நாம் அதை வாங்கி நமது ஜனங்களுக்குக் கொடுத்து அங்கு குடியேறும்படிச் செய்யவேண்டும். இதுவே நமது நோக்க மாகவும் கொள்கையாகவும் இருக்கவேண்டும். பூகோள அமைப்பின்படி ரஷ்யாவும், நாமும் சும்மா இருக்கமுடியாது. சண்டைபோட்டே ஆகவேண்டும். அதற்காகவே ரஷ்யாவும் நாமும் தளவாடங்களை அதிகமாக அபிவிருத்தி செய்து வருகிறோம்.

மஞ்சூரியாவில் கம்முடைய கொள்ளையடிப்பு பல மாதிரியாக இருக்கவேண்டும். அடிக்கடி நமது திட்டங்கள் வெளியில் தெரியாமல் இருக்க நமது தலைமைக் காரியாலயங்களை இரகசியமான இடத்தில் அமைக்கவேண்டும். மஞ்சூரியா, மங்கோலியாவிலுள்ள நமது ஏஜண்டுகள் மத்திய காரியாலயத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளச் செய்ய வேண்டும். கொரியாவைக் கைக்கொள்ள நமது மந்திரிகளான இதோ, கட்சூரா ஆகியவர்களின் திட்டங்களைக் கைக் கொள்ளவேண்டும். இக் காரியங்களைக் கவனிக்க ஒரு காலணி இலாகாவை உண்டாக்கி, அதன் மூலம் நமது விஸ்தரிப்பு வேலைகளைச் செய்யவேண்டும்." - இவையும் இவைபோன்ற பிறவும் `ஜப்பானிய மெயின் காம்ப்’ ஆகிய, தனகா அறிக்கையில் காணப்படுகின்றன.

இத்திட்டங்களில் சில நிறைவேறியும், சில நிறைவேற முயற்சித்தும், சில அடியோடு நிறைவேற முடியாமலும் இருக்கின்றன. இவைகளைக் காணும்பொழுது ஜப்பானி யர்களுக்கும், நேர்மை என்பதற்கும் சிறிதும் பொருத்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/77&oldid=487374" இலிருந்து மீள்விக்கப்பட்டது