பக்கம்:வானொலியிலே.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கி. ஆ. பெ. விசுவநாதம் நூல்கள்

தமிழ்ச் செல்வம் - ரூ. 2 00

நாடு, மக்கள், காதல், கொடை, வீரம் என்ற பல தலைப்புக்களில் தமிழ்ப் பெருமக்களின் சிறந்த பண்புகளை புறநானூறு, திருக்குறள் போன்ற நூல்களிலிருந்து தொகுத்த இனிமையான நாடக நூல்.

திருக்குறள் புதைபொருள் - ரூ. 0 50

திருக்குறள் சுரங்கத்திலிருந்து பன்னிரண்டு பாளங்கன் எடுத்து வந்து அவ்ற்றின் சிந்தைக்கினிய அழகினைச் செவ்விய முறையில் ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்.

வள்ளுவரும் குறளும்- ரூ. 1 00

இங்நூலில் மக்கள் அனைவரும் கற்கவேண்டிய பல உண்மைகள் குவிந்து கிடக்கின்றன.

ஐந்து செல்வங்கள் - ரூ. 0 50

பணமும் பண்டமும் மட்டும் செல்வம் அல்ல. பெற்ற தாயும், அறிவு நிறைந்த பெரியோரும், நோயற்ற உடலும், உள்ளத்து எழும் சிங்தனைகளும் ஒழுக்கமும் அரிய செல்வங்கள் என விளக்கும் இனிய நூல்.

தமிழ் மருந்துகள் - ரூ. 0 50

தமிழகத்தில் முளைக்கும் செடி கொடிகளேயே மருந்தாகப் பயன் படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் சுமார் நூறு வைத்திய முறைகள் கூறப்பட்டுள்ளன.

எண்ணக் குவியல் - ரு 0 50

சொல்லுக்குச் சொல் தமிழ்ப் பற்றையும், நாட்டுப் பற்றையும் உண்டாக்கும் பல கட்டுரைகள் கொண்டது.

மும்மணிகள் - ரூ. 0 50

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய திரிகடுகத்தின் கருத்துக்களைத் தழுவியது. உயர்ந்த நீதிகளைத் தித்திக்கும் செந்தமிழில் வடித்துத் தருகிறது.

அறிவுக்கு உணவு - ரு, 0 50

சிறு வடிவில் சிறிய, சிறிய சொற்களில் உள்ளத்தை ஊடுருவிப் பாயும் உயர்ந்த கருத்துக் குவியல்கள்.

பாரி நிலையம்
59, பிராட்வே :: சென்னை-1.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/80&oldid=487321" இலிருந்து மீள்விக்கப்பட்டது