பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翡覆 வாய்மொழியும் வாசகமும் காக்கவில்லையேல் அருள் முதலிய குணங்கள் ஒளிபெறா' என்று அஞ்ச வேண்டா; உம்மைச் சிறிதும் நோக்கிப்பாராது தன்னிச்சையில் செயல் படுபவனிடம் சாத்திரத்தைப் பயன் படுத்துவீர்; உம்மை அன்புடன் நாடிவந்த இவனைப் பாவங் களினின்றும் நீக்கிக் காப்பாற்றுவீர். இப்படிச் செய்தால் சாத்திரமும் பழுது படாது: உம்முடைய அருட்குணமும் உயிர் பெற்றுத துலங்கும்". இவ்வாறு எம்பெருமானுக்கு ஏற்ற பற்பல இனிய சொற்களைப் பகர்ந்து அவன் சினத்தை மாற்றி, அவனுக்குச் சேதநனிடம் அருள் பிறக்குமாறு செய்வர். இவ்வினிய சொற்களாலும் எம்பெருமானது நெஞ்சம் இளகவில்லையேல் பிராட்டியார் தம் அழகைக் காட்டி அவனைத் தம் வசப்படுத்திச் சேதநனை அங்கீகரிக்கு மாறு செய்வர். - ... . . . . எம்பெருமாட்டி சேதநனை நோக்கி இவ்வாறு பேசுவர்: 'உன் குற்றங்களின் மிகுதியைப் பார்த்தால், உனக்கு ஓரிடத்திலும் காலூன்ற இடம் இல்லை. ஈசுவரன் யாதொன்றாலும் தடைசெய்யப் பெறாத சுவாதந்திரத்தை யுடையவனாதலால் குற்றங்களைப் பத்துப் பத்தாகக் கணக்கிட்டு அதுத்து நுகர்விப்பான். இதற்கு நீ தப்ப வேண்டுமாகில் அவன் திருவடிகளில் தலைசாய்க்கையைத் தவிர வேறுவழி இல்லை. குற்றங்கள் நிறைந்த உன்னை அவன் ஏற்றுக் கொள்வானோ? என்ற ஐயம் வேண்டா, ருசி பிறந்த அளவில் உன்னுடைய குற்றங்கள் அனைத்தையும் பொறுப்பான். இனியனவாகவும் கொள்ளுதற்கு ஈடானவு மான குணங்களால் நிறைந்தவன் என்று புகழ் பெற்றவன். ஆகவே, நீ உய்ய வேண்டுமாகில் அவனை அடைந்திடுக! என்று நல்லுபதேச செய்வார். . . இந்த இரண்டையும் கருத்தில் கொண்ட பிள்ளை உலக ஆசிரியர், - "உபதேசத்தால் மீளாத போது சேதனை அருளாலே திருத்தும் ஈசுவரனை அழகாலே திருத்தும்" ". (ஜீவன் ஆஷ.14