பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登密 வாய்மொழியும் வாசகமும் பெம்மானே!’ (1-67) என்று முதற்பாடல் சிவபுராணத்திலே குறிப்பிடுவதைக் காணலாம். கண்ணாாமு தக்கடல்" (4-150), ஆராஅமுதே அருளே போற்றி (டிெ- 199) அருளமுதம் (17), மாலமுதப் பெருங்கடலே!” (30), தேனே அமுதே!’ (59), ஆணே பெண்ணே ஆரமுதே' *88), தேனே அமுதே?’ (89), தேனே அமுதே' (94), அமுதப் பெருங்கடலே! (116), மணியே அமுதே' (117), *அத்தன் ஆனந்தன் அமுதன் (157), கண்ணாாமுதமுமாய்' (172), ஆராஅமுதாய் (176), தேன் வந்தமுதின் (178), பொன்னம்பலத்தாடும் அமுதே' (380) கோதிலா அமுதே' (390), நிறையின அமுதை அமுதின் சுவையை” (க39ர், அந்தமில் அமுதே' (458). அருளாரமுதப் பெருங்கடல்' (485), அன்பினில் விளைந்த ஆரமுதே' (536), உண்ணார்ந்த ஆரமுதே' (545), தேனாய் அமுத மாய்த் தித்திக்கும் சிவபெருமான் (558), வந்தெனக்கு மாறின்றி ஆராஅமுதமாய் (621), என்றவை காண்க. அமுதமாய்த் திகழும் இறைவனை அநுபவித்த பெரியார்கள் இருவரும் நமக்குத் தெரிந்த பொருள்களைக் கொண்டே விளக்குகின்றனர். காதலின்பமாகிய சிற்றின் பத்தையே இன்னதென எடுத்துக்காட்ட இயலாதபோது, பேரின்பமாகிய இறையநுபவத்தை எங்ஙனம் எடுத்துக் காட்ட இயலும்? இதனை நம்மாழ்வார். உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று உயர்ந்துஉரு வியந்தஇந் நிலைமை உணர்ந்து உணர்ந்து உணரிலும், இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் (1.3:6) என்து உணர்த்துவர். எனினும், ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும் மாயப் பிரானைஎன் மாணிக்கச் சோதியை துய அமுதைப் பருகிப் பருகிஎன் . மாயப் பிறவி மயர்வறுத் தேனே (1.7:3)