பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

霊23 வாய்மொழியும் வாசகமும் கண்ணாளன் கண்னமங்கை நகராளன் கழல்சூடி அவனை உள்ளத்து எண்ணாத மானிடத்தை எண்ணாத போதெல்லாம் இனிய வாறே -டிெ, 11.6:7 என்ற பாசுரங்கள் அதுசந்திக்கத் தகும், அநுபவ ரசிகர் கனான ஆழ்வார்கள் எம்பெருமானை யானையாகப் பல விடங்களிலும் பேசுவதை அவர்கள் பாசுரங்களில் # F'ssšrgsfri (3. அடுத்து, அற்ப சம்பத்துகளையுடையரானவர்களைக் குறித்துக் கவிபாடுவாரை நிந்திக்கின்றார் ஆழ்வார். உளனாக வேயெண்ணித் தன்னையொன் றாகத்தன் செல்வத்தை - : * வளனா மதிக்கும்.இம் மானிடத் தைக்கவி பாடியென் ? (2) தன்னையும் ஒரு பொருளாகப் பாவித்துத் தன் செல்வத் தையும் ஒரு செல்வமாக மதித்திருக்கின்ற இந்த அற்ப மனிதர்களைக் கவிபாடி என்ன பயனாகும்? என்று கூறு கின்றனர். அந்தப் பரம்பொருளைத் தவிர பலவகைப் பட்ட பொருள்கள் ஒன்றும் இல்லை" என்பது கடவல்லி உபநிடதம் (2.4:11), ஆகவே, அவனுக்குப் புறம்பாய் இருப்பது என்பதாக ஒரு பொருள் இல்லை. தானே இல்லையாம்போது தன் செல்வம் என்று ஒன்று உண்டோ? இல்லாத செல்வத்தை இருப்பதாக நினைப்பது தவறு. அதற்குமேல் அது தன்னை மிகவும் உயர்ந்ததாக மதித் திருப்பது மேலும் பெருந்தவறு. இம் மானிடரை' என்று சொல்ல வேண்டிய இடத்தில் இம் மானிடத்தை என்று அஃறினையாகச் சொன்னதற்கும் ஒரு சிறப்புப் பொருள் உண்டு. தன்னை மெய்யாக அறியாதவன் அறிவற்ற 2. தன்னை மெய்யாக என்றது. சிலேடை. ஈசு வரனுக்குத் தன்னைச் சரீரமாக நினையாதவன் என்றும், தன்னை உண்மையாக அறியாதவன் என்றும் இருபொருள் காண்க, -