பக்கம்:வாய்மொழியும் வாசகமும்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்க்கு அறிவுரை 巫25。 மானிடம் பாடிக் கீழான நிலையை அடையப் பார்க்கின்றீர் களே. பாட்டுண்கிறவனுக்கு இல்லாத நன்மைகளை இட்டுச் சொல்லுகையாலே, அவனுக்கே ஒரு பிரமிப்பு ஏற்பட்டு விடும். அவனுக்கு இல்லாதனவற்றை இட்டுப் பாடும்போது க வி. க ளு ம் அவற்றையுடையவனையன்றோகாட்டும்?" என்கின்றார் (3). தக்பிரான் தோழரும், மிடுக்கி லாதானை வீம னேவிறல் விசயனே வில்லுக் கிவனென்று கொடுக்கி லாதானைப் பாரியே என்று கூறி லும்கொடுப் பாரிலை (2) என்று கூறுவர் இப்படிப் பாடாமல் பொடி கொள்மேனி எம் புண்ணியன் புகலுாரைப் பாடினால், அமரர் உலகம் ஆள்வதற்குரிய பேறும் கிட்டும். இதில் ஐயம் சிறிதும் இல்லை என்றும் உறுதி கூறுவர் (2). சடகோபர் கூறுவார்: அழிந்து போகின்ற ஒரு மானிடப் பிறவியைப் பாடிப் படைக்கும் பெரிய பொருள் எத்தனை நாட்களுக்குப் போதும்? மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால் தனக்கே உரியவனாக நினைத்துப் பிறவித் தளையும் அறும்படி செய்வான். சுந்தரமூர்த்தி அடிகளும், காணி யேற்பெரி துடையனே கற்று கல்லனே சுற்றகன்கிளை பேணி யேவிருந் தோம்புமே என்று பேசி னும்கொடுப் பாரிலை (3) என்று பேசுவர். ஆழ்வார் அருளிச் செய்வது; குப்பைகளைக் கிளறினால் கெடுதலான கூறுகள் தென்படுமேயன்றி நன்றான தொன்றும் தென்படமாட்டாது; அதுபோல் நீசர்கள் வரலாற்றைக் கவி பாடப் புகுந்தால் மறைந்து கிடக்கும் மாசுகள்தாம் வெளி வரும்’ என்று அநுபவத்திற்குப்